கபில் தேவ் உடல்நிலையில் முன்னேற்றம்: புகைப்படம் வெளியீடு!

V4U MEDIA [ Sat, Oct 24, 2020 ]

133

சிகிச்சை பெற்றுவரும் கபில் தேவ்-ன் ‘Thumbs Up’ புகைப்படம் வெளியீடு 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் .மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், கபில் தேவ் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் ‘Thumbs Up’ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கபில் தேவ் அடுத்த ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளது.


Tags : Others

Latest News