"தளபதி விஜய்"யின் புகைப்படத்தை வைத்து குமரி மாவட்ட காவல்துறை செய்த விழிப்புணர்வு பிரச்சாரம் !

V4U MEDIA [ Fri, Feb 14, 2020 ]

273

பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள காவல் துறையை அழைப்பதற்காக தங்கள் செல்போனில் "KAVALAN SOS APP" (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் என காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த ஆப்பில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வந்துவிடும். தமிழ் / ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பயன்படுத்தலாம். 

காவலன் செயலியை பிரபலப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் "தளபதி விஜய்" நடித்த திரைப்பட காட்சிகளை மீம்ஸ்களாக மாற்றி இணையத்தில் பரப்பி வருகின்றனர். 

"துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் பார்வைத்திறனற்றவராக வரும் சிம்ரனின் பாதுகாப்பு குறித்து நடிகர் விஜய் கவலைப்படுவது மற்றும் "சர்க்கார்" படத்தில் வரும் காட்சியை மீம்ஸ்களாக மாற்றி காவல்துறையின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Latest News