உலகநாயகனுக்கு பிடித்த 3 பிரபல நடிகர்கள்!!

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

உலக நாயகன் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் நேற்று உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி சினிமா பிரபலங்களும் நடிகர் கமல்ஹாசனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

அது மட்டுமல்ல கமல் அவர்கள் நேற்று தனது சொந்த ஊரான பரமக்குடியில் தன் தந்தையின் உருவச்சிலையை திறந்து வைப்பதற்காக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு அங்கு சென்றார். இதனால் இந்தியாவின் மீடியாக்கள் அனைத்தும் பரமக்குடி நோக்கி கவனத்தை திருப்பினர்.

இந்தநிலையில் கமல் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் சந்திப்பு நிகழ்த்தியபோது, உங்களுக்கு பிடித்தமான நடிகர் யார் என்ற கேள்வியை கமலிடம் எழுப்பினர்.. அப்போது அவர் தமிழில் எந்த நடிகர் பற்றியும் கூறப்போவதில்லை என கூறிய அவர், மலையாளத்தில் பஹத் பாசில் என்னும் நடிகர் என்னுடைய பேவரைட் என கூறினார்.

அதுமட்டுமல்ல, “பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் மற்றும் பிரபல நடிகரான சஷாங் அரோரா ஆகிய இருவரும் என் மனம் கவர்ந்த நடிகர்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.. “இதில் பேட்ட படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நவாசுதீன் சித்திக் ஹேராம் படத்தில் என்னுடைய உதவியாளராக பணிபுரிந்து என்னை மிகவும் கவர்ந்தார்.... இளம் நடிகர் சஷாங் கிட்டத்தட்ட பழம்பெரும் நடிகர் நாகேஷின் குணாதிசயங்களை கொண்டுள்ளார், அவரும் என்னை கவர்ந்துள்ளார்' எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.


Latest News