ஜீவா மற்றும் அருள்நிதி மிரட்டும் "களத்தில் சந்திப்போம்" படத்தின் டீசர் வெளியீடு !

V4U MEDIA [ Mon, Oct 26, 2020 ]

77

விமல் நடித்த ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள படம் ‘களத்தில் சந்திப்போம்’. இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸின் 90-வது படமாகும்.

ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பாவனி ஷங்கரும் நடித்துள்ளனர். ரோபோ ஷங்கர், பாலா சரவணன், "ஆடுகளம்" நரேன், ரேணுகா என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


விஜயதசமி திருநாளான இன்று ( அக்டோபர் 26 ) இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீஸர் வெளியான 1 மணி நேரத்திலேயே சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இப்படத்தைத் தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

Tags : Cinema

Latest News