தலைவி படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்??

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

10 10 10 10 10

தமிழகத்தின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் தலைவி திரைப்படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க, பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக பரதநாட்டியம் மற்றும் வேறு சில பயிற்சிகளை மேற்கொண்டு கடந்த வாரத்தில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தில் எம்ஜிஆர் அவர்களின் வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார்.


மேலும் ஜெயலலிதா அவர்களுடன் நடித்துள்ள பிரபல முன்னாள் நடிகர்களின் கதாபாத்திரங்களிலும், சில இளம் வயது நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். அவர்களில் பிரபல தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான என்டிஆரின் அவர்களின் வேடத்தில் அவரது பேரனான ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Latest News