‘தம்பி’ திரைப்படத்திற்கு முன் ரிலீஸாகும் இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கிய திரில்லர் படம்!

V4U MEDIA [ Fri, Dec 13, 2019 ]

27

கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கத்தில் உருவான பாபநாசம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தி, ஜோதிகா நடித்த தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி ஜித்து ஜோசப் இயக்கிய ஹிந்தி படம் ஒன்று வெளியாகியுள்ளது. ‘தி பாடி’ என்ற டைட்டிலை கொண்ட இந்த படத்தில் இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர், வேதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு திரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு வட இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் நல்ல ஓப்பனிங் வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை அடுத்து அடுத்த வாரத்தில் ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்த தம்பி படம் ரிலீசாக உள்ளது இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் ஜீத்து ஜோசப்பின் இந்த படமும் மிகப் பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News