உங்கள் வீடு தேடி நானே வருகிறேன் - இசைஞானி இளையராஜா !

V4U MEDIA [ Wed, Jun 03, 2020 ]

1

நேற்று (மே 02) இசைஞானி இளையராஜா பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் இசைஞானி இளையராஜா. அதில் 'ரசிகர்களாகிய உங்களை நானே நேரடியாக வீட்டிற்கு நேரில் வருகிறேன்' என கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. கொரோனா ஊரடங்கு காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போனது. இருந்தாலும் நானே உங்களை நேரில் வந்து உங்கள் வீட்டிலேயே சந்திக்க போகிறேன். ஆம், இசை ஓடிடி (OTT) என்ற ஒன்றை நான் ஆரம்பிக்கின்றேன். இந்த இசை ஓடிடியில் நான் எனது பாடல்களையும், இசை அனுபவங்களையும், பாடல்கள் கம்போஸ் செய்யும் போது நடந்த சில சுவாரஸ்மான சம்பவங்களையும் உங்களோடு விரிவாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மேலும் என்னை பற்றி பல இசை மேதைகள் குறிப்பிட்ட சில பேட்டிகளும் அதில் ஒளிபரப்பாக உள்ளேன். வேறு எந்த சேனல்களிலும் கேட்க முடியாத இந்த தகவல்களை நீங்கள் கேட்டும் பார்த்தும் மகிழலாம். இந்த இசை ஓடிடி விரைவில் உருவாக இருக்கிறது அதற்காக காத்திருங்கள்' என இசைஞானி இளையராஜா வீடியோவில் கூறியுள்ளார்.

Latest News