சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலை என்ன ?? நிர்வாகிகளுடன் என்ன பேசினார் ??

V4U MEDIA [ Mon, Nov 30, 2020 ]

230

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இன்று ( நவம்பர் 30ம் தேதி) சந்தித்து பேசினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் ராகவேந்திரா மண்டபம் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம், தமிழக அரசியல் நிலவரம், ரசிகர்கள் மனநிலை, நிர்வாகிகளின் கருத்து என பல்வேறு கருத்துகளை பல மாதங்களாக கலந்தோசித்து அது குறித்து மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை மிகவும் உன்னிப்பாக கேட்டுள்ளார்.

கூட்டத்தில் மொத்தம் 52 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அரசின் அறிவுறதலின்படி சமூக இடைவெளியை மண்டுபத்திற்குள் மட்டும் கடைப்பிடித்தனர்.

ஆலோசனையின் போது சூப்பர்ஸ்டார் தற்போது கட்சித் தொடங்கலாமா ?? வேண்டாமா ?? என மாவட்ட நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு வெறும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கட்சித் தொடங்கினால் வெற்றி கிட்டுமா ? சாதகம் மற்றும் பாதகம் என்ன ? என பல கேள்விகள் குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் ஆலோசித்ததாக தெரிகிறது. அனைத்து கேள்விக்கும் மாவட்ட நிர்வாகிகள் தனித்தினியே பதில் அளித்தனர். அனைத்து நிர்வாகிகளும் நீங்கள் கட்சி உடனடியாக தொடங்க வேண்டும் அது மட்டுமின்றி நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் என கூறியுள்ளனர்.

Tags : Cinema

Latest News