மன்னிப்பு கேட்க முடியாது - நடிகர் சத்யராஜ் மகள் அதிரடி !

V4U MEDIA [ Wed, Sep 30, 2020 ]

139

ரத யாத்திரை குறித்த தனது அறிக்கைக்கு சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரத யாத்திரை குறித்து நான் கூறிய கருத்து சரிதான் என்றும், அதனால் மன்னிப்பு கேட்கும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என திவ்யா சத்யராஜ் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று நேற்று (செப்டம்பர் 29) வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில்,

சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌. இவர்‌ கொரோனா நேரத்தில்‌ தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ''மகிழ்மதி'' என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.

சில வருடங்களுக்கு முன்‌ மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைகேடுகள்‌ பற்றியும்‌ நீட்‌ தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா சத்யராஜ்‌ பிரதமர்‌ மோடிக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைதளங்களில்‌ வைரல்‌ ஆனது.


இப்பொழுது ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்‌ வைத்த கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்‌. "கொரோனா நேரத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ரத யாத்திரை நடந்தால்‌ மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள்‌ இருக்கிறது. கொரோன நேரத்தில்‌ ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம்‌ கிடையாது. தமிழ மக்களின்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ உயிர்‌ மீதும்‌ அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும்‌, தமிழ்‌ மகளாகவும்‌ ரத யாத்திரையை எதாக்கிறேன்‌. மதத்தை வளர்ப்பதில்‌ இருக்கும்‌ அக்கறை மக்களின்‌ உயிர்‌ மீதும்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ இல்லாதது வருத்தமாக இருக்கிறது''.

"ரத யாத்திரையை எதிரத்ததற்காக மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌ இல்லை'' என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


Tags : Cinema

Latest News