ராஜமவுலி படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்கள்!!

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

10 10 10 10 10

இயக்குனர் ராஜமவுலி மிக பிரம்மாண்டமாக இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் பிரபலங்கள் ஒப்பந்தமாகி உள்ளனர்.


பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி இப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான நடிகர் ராம்சரண் மற்றும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா என்பவர் தயாரிக்கும் இப்படம் சுமார் ரூ. 350 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் நடிகர் அஜய் தேவ்கன், இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரகனி, நடிகை அலியா பட் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் திரைக்கதை சுதந்திர போராட்ட வீரர்கள் சீதராமராஜு மற்றும் கொமராம்பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. 


இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் வில்லன்கள் குறித்தான தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி பிரபல ஹாலிவுட் கலைஞர்களான ரே ஸ்டீவென்சன், அலிசன்டூட்டி ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் நடிகை ஓலிவா மோரிஸ், நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இப்படம் அடுத்த 2020ஆண்டு ஜூலை 30-ந் தேதி அன்று உலகம் முழுவதும் பத்து மொழிகளில் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Latest News