குயின் மற்றும் தலைவி திரைப்படத்திற்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

V4U MEDIA [ Fri, Dec 13, 2019 ]

32

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட குயின் என்ற வலைத் தொடரை இயக்கியுள்ளார், மேலும் ஏ.எல் விஜய் தலைவி என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்க இரு இயக்குநர்களும் அனுமதி கோரவில்லை என்றும், அவர்கள் முன்னாள் முதல்வரின் மதிப்பு மரியாதையை கெடுக்கக் கூடும் என்று ஜெயலலிதாவின் மருமகள் ஜே தீபா இதற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.


குயின் வளைத்த தொடரில் தீபாவைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்று கெளதம் மேனன் பதிலளித்துள்ளார், இது ஒரு கற்பனையான கதை என்றும், ஏ.எல் விஜய்யின் குழு தலைவி திரைப்படம் இப்படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த புத்தகத்தை யாரும் தடை செய்யவில்லை என்றும் பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த திரைப்படங்கள் எதையும் அடிப்படையாக கொண்டு இருக்காமல் கற்பனையான கதையாக இருக்கவேண்டும், மேலும் இப்படம் கற்பனை கதை என்று படத்தில் உறுதியாக தெரிவித்தால் எந்த தடையும் இருக்காது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குயின் நாளை எம்எக்ஸ் பிளேயரில் வெளியாகிறது, தலைவி திரைப்படம் ஜூன் 26 அன்று வெளியாகிறது.
Latest News