ரெஜினா கசண்ட்ராவை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு!!

V4U MEDIA [ Sat, Aug 17, 2019 ]

ரெஜினா கசண்ட்ராவை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு!!

நடிகை ரெஜினா கசண்ட்ரா தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்ன ஒரு தனி இடம் பிடித்து வைத்திருப்பவர் இவர். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 'எவரு'. இந்த படத்திலிருந்து கேட்கப்படும் தனது கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்கள், தன்னை நேரில் சந்தித்து, தன்னுடன் அமர்ந்து காபி குடிக்கலாம் எனக் கூறி நடிகை ரெஜினா போட்டி ஒன்றை டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

'எவரு' ஒரு திரில்லர் படம், விமர்சகர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா இந்த டுவீட் செய்துள்ளார். "எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?" என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள் ரெஜினாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெறுவர்.

இந்த போட்டியின் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும், நாளையே ரெஜினாவை வெற்றியாளர் நேரில் சந்திப்பர். ரெஜினாவின் ரசிகர்கள் இதற்கு பதில் அளித்து வருகின்றனர். தன்னுடைய படத்திற்காக தானே போட்டி அறிவித்துள்ள ரெஜினாவை தெலுங்கு திரையுலகம் வியப்புடன் பார்க்கிறது.

Latest News