ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு படத்தின் டீசர் வெளியானது!!

V4U MEDIA [ Wed, Jan 29, 2020 ]

விந்து தானம் குறித்த கதை களம் உள்ள புதிய திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலை தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வளரும் நட்சத்திரமாக வலம் வருகிற நடிகர் ஆயுஸ்மான் குர்ரானா முதன் முதலில் அறிமுகமான இந்த படம் விக்கி டோனர். விந்து தான விழிப்புணர்வு குறித்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றதோடு பல விருதுகளையும் வென்றுள்ளது.


இதையடுத்து இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்கிற ஆர்வம் பல இயக்குனர்களிடம் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் அவருடைய ஜோடியாக தடம் திரைப்படத்தில் நடித்த நடிகை தன்யா ஹோப் நடிக்கிறார்,. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்துள்ளார்.  விந்து தானம் பற்றிய இப்படத்தின் தலைப்பாக ரசிகர்களை கவரும் விதத்தில் "தாராள பிரபு" என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். டீஸர் பார்ப்பதற்கு மிகவும் ஸ்வாரசியமாக இருக்கிறது.

Latest News