புற்று நோயாளிகளுக்கு உதவி செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண் !

V4U MEDIA [ Tue, Sep 29, 2020 ]

170

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதிக இளம் வயது ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஹரிஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாகவும் மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
​​


தற்போது ஹரிஷ் கல்யாணின் பெருந்தன்மையான செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. ஹரிஷ் கல்யாண் புற்றுநோய் நோயாளிகளுக்கு நிதியுதவி அளித்து உதவியுள்ளார்.

புற்றுநோய் நோயாளிகளை ஆதரவளித்து பாதுகாத்து வரும் ஸ்ரீமாதா புற்றுநோய் மையத்திற்கு ஹரிஷ் கல்யான் ரூ.3,70,000-க்கான காசோலை வழங்கி உதவியுள்ளார்

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட ஹரிஷ் "உதவியற்ற புற்றுநோயாளிகளை அவர்களின் கடைசி தருணங்கள் வரை கவனித்து வரும் ஸ்ரீ மாதா புற்றுநோய் பராமரிப்பு மையத்தின் திருமதி விஜயஸ்ரீக்கு எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்த கொள்கிறேன். மனிதர்களுக்கு அளிக்கும் அவர்களின் சேவைக்கு எனது தாழ்மையான பங்களிப்பு இங்கே. (அவர்களின் சேவை குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்த்தில் தான் இதைப் பகிர்கிறேன்)" என தெரிவித்துள்ளார்.


Tags : Cinema

Latest News