ஜூலை 7 - 39வது பிறந்தநாள் கொண்டாடும் கேப்டன் கூல் எம்.எஸ்.தோனி !

V4U MEDIA [ Tue, Jul 07, 2020 ]

62

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் 39வது பிறந்தநாளை இன்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் 3 உலகக் கோப்பைகளை பெற்று தந்த கேப்டன் தோனி. அதிக ரசிகர்களை கொண்டவர். இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பொறுமை மற்றும் நிதானத்தை எப்போதும் இழக்க மாட்டார். ரசிகர்கள் இவரை செல்லமாக ' கூல் கேப்டன் ' , ' தல தோனி ' என அழைப்பார்கள். 

Image

சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது அயராது உழைப்பால் இன்று கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டுள்ள தோனியின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image

1981ம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்தவர் மகேந்திர சிங் தோனி. ஆரம்ப காலத்தில் இந்திய ரயில்வே வாரியத்தில் டிடிஆராக பணியாற்றி வந்தார்.

கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் காரணமாக பல்வேறு ஊர்களில் நடக்கும் போட்டிகளில் விளையாடி, இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ் மன்னனாக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்கு பல வருடங்கள் கழித்து அனைவரும் எதிர்பார்த்த உலக கோப்பையும் பெற்று தந்து வரலாற்றில் இடம்பிடித்தார்.

Image

வெற்றி தோல்வி என இரண்டையுமே சரியாக சம அளவில் கையாள தெரிந்தவர் என்பதே தோனியின் தனிச்சிறப்பு. இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் 3 உலக கோப்பைகளை பெற்றுத் தந்த பெருமையும் தோனியே சேரும். இக்கட்டான சூழ்நிலையில் கூட தனது இயல்பான சுபாவத்தால் ரசிகர்களால் 'கூல் கேப்டன்' என அன்புடன் அழைக்கப்படுவார்.

Image

தோனியை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருடைய பிறந்தநாளுகாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான தரமான வீடியோ ஒன்றை வெளியிட்டு சிறப்பாக கொண்டாடியுள்ளது. அவரது ரசிகர்கள் #HappyBirthdayDhoni என ஹேஸ் டேக் உருவாக்கி உலக அளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

எம்.எஸ்.தோனியின் பிறந்தநாள் பரிசாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோ எழுதிய பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு இப்பாடலுடன், 'ஹெலிகாப்டர் 7 புறப்பட்டது! தோனிக்கு மரியாதை செய்த டுவைன் பிராவோ, ஹேப்பி பர்த் டே தோனி' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.
Image

பல விருதுகளும் வென்றுள்ளார் தோனி. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருதுகள் மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் கௌரவ துணை நிலை கர்னல் பதவி கெளரவத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் மகேந்திர சிங் தோனிக்கு அவர்களுக்கு V4U Media சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Latest News