இயக்குனர் கவுதம் மேனனுடன் முதன்முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் !

V4U MEDIA [ Fri, May 22, 2020 ]

60

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் சமீபத்தில் "செல்பி" என்ற புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளரான மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக 96 மற்றும் பிகில் புகழ் வர்ஷா நடிக்கிறார். படத்தின் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கவுள்ளார். இவரது நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவிலான வரவேற்பை பெற்றார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் ஜொலிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் உடன் முதன்முறையாக கவுதம் மேனன் கூட்டணி சேருவதால் இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Latest News