உடல்நிலை பற்றி வதந்தி : கவுண்டமணி போலீசில் புகார்

V4U MEDIA [ Sat, Oct 24, 2020 ]

148

தமிழ் சினிமாவில் பல ஆயிரம் காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவரை அடிச்சுக்க யாரும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் அவர் தான் காமெடி நடிகர் கவுண்டமணி.

இப்போதெல்லாம் திரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்தி எழுவதும் அதன் பின்னர் அந்த வதந்திக்கு பிரபலங்கள் விளக்கம் அளித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து கவுண்டமணியின் உடல்நிலை குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தகவலை பார்த்த நட்சத்திர நடிகர்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

.


இதை கேள்விப்பட்ட கவுண்டமணி தரப்பினர் நடிகர் கவுண்டமணி நலம்.. அவர் வழக்கமான பணிகள், அடுத்த பட வேலைகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புவதை வேடிக்கை ஆக வைத்துள்ளனர். அதை நம்ப வேண்டாம். கவுண்டமணி வீட்டில் முற்றிலும் நலம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வதந்தி பரவியவர் மீதி நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 


Tags : Cinema

Latest News