பிரபாஸுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த படக்குழுவினர் !

V4U MEDIA [ Wed, Oct 21, 2020 ]

95

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.

அகில இந்திய நடிகரான பிரபாஸ் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டுவரும் நோக்கில் அட்வான்ஸ் பிறந்தநாள் விருந்தாக, ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர்களான யுவி கிரியேஷன்ஸ் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன் படி ‘விக்ரமாதித்யா’ என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது.

“CAPTION AND LINK” எனப்படும் போஸ்டர் மற்றும் பிரபாஸ் லுக் இரண்டையும் பட தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். தங்கள் ஆஸ்தான நடிகரின் பிறந்தநாளை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இந்த போஸ்டர் நிச்சயமாக பிரபாஸுக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு.
Image

கடந்த அக். 13 அன்று நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாளின் போது, தயாரிப்பாளர்கள் அவரது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
அதேவேளையில், படக்குழுவினர் தற்போது இத்தாலி நாட்டின் டோரினாவின் அழகிய மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். வடக்கு இத்தாலியில் அமைந்துள்ள டோரினா நகரத்தில் அழகிய ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ளது. இந்த நகரம் சில பிரபலமான அடையாளங்களால அறியப்படுகிறது. இந்த இடங்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்கவர் திரைப்படமாக்குவது மட்டுமின்றி கதையின் தரத்தை உயர்த்துகிறது. பிரம்மாண்ட படைப்பான 'ராதேஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
UV கிரியேஷன்ஸ் சார்பில் பிரமோத் வம்சி தயாரிப்பில்
ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ரொமாண்டிக் பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Cinema

Latest News