அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி !

V4U MEDIA [ Tue, Sep 15, 2020 ]

39

நடிகை அக்‌ஷரா ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது....எங்கள் படத்தின் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. நாங்கள் கேட்டுக்கொண்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல், மிக இயல்பாக எங்கள் படத்தலைப்பை வெளியிட்டு தந்த விஜய் சேதுபதியின் எளிமையான பண்பு, எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு எங்கள் மனம்கனிந்த நன்றி.

Image

படத்தலைப்பை பற்றி கூறியதவாது... 

சமூகத்தை பொறுத்தவரை “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு “ எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதியாக கருதப்படுகிறது. எங்கள் படம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதைத்தாண்டி கதைதளம் பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதை அறிந்துகொண்டால் தான் அது சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்.

தென்னிந்திய டிஜிட்டல் தளத்தில், தங்களது தரமான தயாரிப்புகள் மூலம் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது ட்ரெண்ட் லவுட் (Trend Loud ). தற்போது அடுத்த கட்ட வளர்ச்சியாக திரைப்படத்துறையில் கால் பதித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது. அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல பாடகி உஷா உதுப் அவருக்கு பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.
Image

படத்தின் தொழில் நுட்ப குழு

ஒளிப்பதிவு - ஷ்ரேயா தேவ் ட்யூப்

படத்தொகுப்பு - கீர்த்தனா முரளி

தயாரிப்பு வடிவமைப்பு - ஷஹானு முரளிதரன்

உடை வடிவமைப்பு - தீமிஸ் வனேஷா

ஒலி வடிவமைப்பு - S.அழகியகூத்தன் & சுரேன்.G

விளம்பர வடிவமைப்பு - கபிலன்

தின அலுவல் நிர்வாக தாயாரிப்பு - கிரன் கேஷவ்

தயாரிப்பு வடிவமைப்பு - வித்யா சுகுமாரன்

பாடல்கள் - மதன் கார்கி

Tags : Cinema

Latest News