மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

10 10 10 10 10

சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவார் மீண்டும் ஜோடி சேர உள்ளார்.​​


நடிகர் சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் திரைப்படம் ’சூரரைப் போற்று’ இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இப்போது டப்பிங் மற்றும் ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் வேலைகள் நடக்கின்றன. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகர் மோகன்பாபு, நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா அடுத்ததாக அவருடைய 39-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகியுள்ளார் . இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக பேசப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் ஆறு, வேல் திரைப்படங்களும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் வெளியானது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, இப்போது வெளியான அசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வெற்றி மாறன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வந்துள்ளது.


இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அடுத்து இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வாரணம் ஆயிரம் என்கிற சூப்பர்ஹிட் திரைப்படம் வெளிவந்தது. மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இருவரும் இணைகிறார்கள். இப்படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சிங்கம் படத்தின் மூன்று பாகத்திலும் சூர்யா-அனுஷ்கா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Latest News