நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து முக்கிய அப்டேட் !!

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

நடிகர் கார்த்தி கடைசியாக நடித்த ‛கைதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய ஹிட்டாகியுள்ளது. நடிகர் கார்த்தி இதுவரை நடித்த படங்களின் வசூலை முறியடிக்கும் வகையில் கைதி வசூலித்துக் கொண்டிருப்பதால், நடிகர் கார்த்தி நடித்துள்ள அடுத்தடுத்த படங்களுக்கு மிக பெரிய ஏதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக நடிகர் கார்த்தி நடிக்கும் படங்கள் மற்ற மொழிகளில் குறைந்த விலையில் தான் போகும். ஆனால் இப்போது கைதி படம் தெலுங்கில் மட்டும் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தற்போது அதன் காரணமாக, கமலை வைத்து ‛பாபநாசம்' இயக்கிய டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள, நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மற்றும் கார்த்தி நடிக்கும் சுல்தான் ஆகிய இரண்டு படங்களையும் வாங்குவதற்கு தமிழ், தெலுங்கில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் மிகுந்த போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள பெயரிடப்படாதப் படம் விரைவில் வெளியாக உள்ளது.


Latest News