வெளிநாட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 'ஈஸ்வரன்' படக்குழுவினர் !

V4U MEDIA [ Mon, Jan 11, 2021 ]

117

நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக 200 திரையரங்கில் கோலாகலமாக வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளிநாட்டில் ரிலீஸ் ஆவது குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வெளிநாட்டில் ஓடிடி மூலம் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Image

ஒரு முன்னணி ஓடிடி நிறுவனத்தின் மூலம் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளிநாட்டில் வாழும் ரசிகர்களுக்கு மட்டும் ப்ரத்யோகமாக வெளியாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ளவர்கள் ஓடிடி மூலம் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டில் உள்ள சிம்பு ரசிகர்கள் ரிலீஸ் தினத்தன்று ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை பார்த்து மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Tags : Cinema

Latest News