"திரௌபதி" படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மோகன் G இயக்கும் படம் " ருத்ர தாண்டவம்"

V4U MEDIA [ Sun, Oct 25, 2020 ]

139

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளி குவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்"

Image

மோகன் G இயக்கி தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கி, மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தை உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு செய்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.

Tags : Cinema

Latest News