மீரா மிதுன் குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் !

V4U MEDIA [ Mon, Oct 14, 2019 ]

2பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார், இந்த முறை அவர் குற்றம் சாட்டி உள்ளவர் பிக் பாஸை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான், அவர் கூறியது என்னவென்றால் நடிகர் கமல்ஹாசன் தனது செல்வாக்கை பயன்படுத்தி, மீரா மிதுன் நடிக்க இருந்த அக்னி சிறகுகள் படத்தின் கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பறித்து தனது இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசனுக்கு கொடுத்துவிட்டதாக கூறி உள்ளார். 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் நவீன் கூறியது என்னவென்றால், அக்னி சிறகுகள் படத்தில் முதலில் அக்ஷராவிற்கு பதிலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஷாலினி பாண்டை தான் ஆ
னால் அதன் பின்பு அவருக்கு பதிலாக அக்ஷராவை ஒப்பந்தம் செய்தோம், ஆகையால் மீரா மிதுனுக்கும் இப்படத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு இது போன்று மீரா மிதுன் நம்ம வீடு பிள்ளை படத்தில் தான் நடித்த காட்சிகளை படக்குழு நீக்கி உள்ளதாக தவறான செய்திகளை பரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
"அக்னி சிறகுகள்" படத்தினை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் அன்டனி கதாநாயகர்களாக மற்றும்
அக்ஷரா ஹாசன், ரெய்மா சென் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் மற்றும் நாசர், தலை வாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.