குண்டு படக்குழுவை பாராட்டிய இயக்குனர் சேரன்!!

V4U MEDIA [ Tue, Dec 10, 2019 ]

246

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் பேனரில் இரண்டாவது படமாக உருவான இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடித்து விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளனர்.


இப்படத்தில் நடித்துள்ள நடிகை ரித்விக்கா தன்னுடன் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற பிரபலங்களான ஜனனி, மும்தாஜ், ஆர்த்தி, சென்ட்ராயன் மற்றும் இந்த சீசனின் பிரபல போட்டியாளர் இயக்குனர் சேரன் ஆகியோரை அழைத்தார். படம் பார்த்த பிறகு, சேரன் ரித்விக்காவிடம் நன்றி தெரிவித்ததோடு, படத்தையும் பாராட்டியுள்ளார்.


ரித்விக்கா தனது கதாபாத்திரத்தில் முழுமையாக மூழ்கியிருக்கும் ஒரு முதிர்ந்த நடிப்பை வழங்கியதாக சேரன் கூறியதுடன், ஒரு வாழ்க்கையை இழக்கும் வேதனையை சமூகம் உணரும் வரை, இதுபோன்ற திரைப்படங்கள் தயாரிக்கப்படும் என்றும், திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தியன் ஆதிரை மற்றும் தயாரிப்பாளர் பா ரஞ்சித் ஆகியோரைப் பாராட்டினார். இது போன் இன்னும் பல திரைப்படங்களுடன் திரைப்பயணத்தைத் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.Latest News