மகனை வெளியுலகிற்கு காட்டிய இயக்குனர் ஏ.எல்.விஜய் !

V4U MEDIA [ Wed, Jun 03, 2020 ]

3

இயக்குனர் ஏ.எல்.விஜய் 'கீரிடம்' , 'பொய் சொல்லப் போறோம்', 'மதராச பட்டினம்', 'தெய்வ திருமகள்', 'தாண்டவம்', 'வணமகன்', 'தலைவா', 'சைவம்', 'தேவி 1&2', 'லக்ஷ்மி' போன்ற பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தார்.

Image   

இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் இருவரும் காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் ஐஸ்வர்யா (MBBS) என்ற பெண்ணை கடந்த வருடம் மணம் முடிந்தார் ஏ.எல் விஜய்.

Image

சமீபத்தில் இயக்குநர் விஜய் - ஐஸ்வர்யா தம்பதிக்கு (மே 30) அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளார்கள். இந்நிலையில் முதன்முதலாக மருத்துவமனையில் தனது மகனை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Latest News