அட்டக்கத்தி தினேஷுக்கு அடித்த யோகம், மீண்டும் ஒரு திறமையான இயக்குனருடன் களமிறங்குகிறார்!!

V4U MEDIA [ Fri, Feb 21, 2020 ]

விசாரனை, ஓரு நாள் கூத்து, திருடன் போலீஸ், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற அட்டக்கத்தி தினேஷ் கடைசியாக அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலக போரின் கடைசிக் குண்டு படத்தில் நடித்தார்.​

இப்போது நல்லு தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர்கள் அருள் தாஸ் மற்றும் கார்த்திக் துரை ஆகியோர் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் தினேஷ் கையெழுத்திட்டுள்ளார், மேலும் இந்த படத்திற்கு தேரும் போரும் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கதிர் மற்றும் ஒவியா நடித்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் சுகுமாரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். தினேஷ் ஒரு மாடு பிடி வீரராக நடிக்கும் தேரும் போரும் படத்தில் ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், சுகுமாரின் ஒளிப்பதிவும் இருக்கும்.
Latest News