வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் தனுஷ் 15 லட்சம் நிதிஉதவி!

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]


வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் தனுஷ் 15 லட்சம் நிதிஉதவி!

தற்போது உலகம் முழுவதும் பயமுறுத்தி வரும் கோரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கி கிடக்கிறது. சமுகத்திற்காகவும் தேசத்திற்காகவும் தங்களை தாங்களே முடக்கி கொண்டு நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேலை முடக்கம் தமிழ் சினிமாவில் பணிபுரிகின்ற தொழிலர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்களை மிகவும் பாதித்துள்ளது.தென்னிந்திய திரைப்பட தொழிலர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ள 25ஆயிரம் உறுப்பினர்களில் ஏறக்குறைய 10ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று ஊதியம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள்.

இந்நிலையில் FEFSI தலைவர் RK செல்வமணி திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தயரிப்பாளர்கள் ஆகியோர் தங்களால் இயன்ற உதவியை கஷ்டப்படும் தொழிலர்களுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தார் .

படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நடிகர் தனுஷ் 15 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளனர்

நேற்று தலைவர் ரஜினிகாந்த் ரூ .50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் சிவகுமார், சூரியா மற்றும் கார்த்தி குடுமபத்தினர் ரூ .10 லட்சம் நன்கொடை அளித்தனர், பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனும் ஃபெப்ஸி உறுப்பினர்களுக்கு ரூ .10 லட்சம் நன்கொடை அளித்தார். இதைத் தொடர்ந்து, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் மற்றும் மனோ பாலா ஆகியோரும் முறையே 250 கிலோ எடையுள்ள 250, 150, மற்றும் 10 மூட்டை அரிசியை வழங்கியுள்ளனர்.  ​​கமல்ஹாசன் 10 லட்சம் , இயக்குனர் சங்கர் 10 லட்சம், கார்த்திக் சுப்பாராஜ்
1 லட்சம் வழங்கியுள்ளனர் .ஆர்.கே.செல்வமணியின் வேண்டுகோளிலிருந்து, கோலிவுட் பிரபலங்கள் தங்கள் படங்களின் வெற்றிக்காக இரவும் பகலும் உழைத்த FEFSI உறுப்பினர்களுக்கு ஆதரவைக் காட்ட விரைந்து வருகின்றனர்.

Latest News