நான்கு நாட்களில் 150 கோடி வசூல் செய்த தர்பார்!!

V4U MEDIA [ Tue, Jan 14, 2020 ]

105

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 167 வது படம் தர்பார் ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகளவில் வெளியிடப்பட்டது, மேலும் இந்த திரைப்படத்திற்கு மக்களிடம் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர், நவாப் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர், அனிருத்தின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் கொண்ட தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் வேடத்தில் நடிக்கிறார்.

தர்பரின் வசூல் குறித்த பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, இப்போது லைகா புரொடக்ஷன்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்தபடி, தர்பார் திரைப்படம் முதல் 4 நாட்களில் உலகளவில் 150 கோடி வசூல் செய்துள்ளது.