சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கியது !

V4U MEDIA [ Mon, Oct 26, 2020 ]

93

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய மெகாஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அஜய் ஞானமுத்து தற்போது சியான் விக்ரம் அவர்களை வைத்து "கோப்ரா" படத்தினை இயக்கியுள்ளார்.

சியான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில், தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40சதவீதம் வரை குறைத்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விஜயதசமி திருநாளான இன்று (அக்டோபர் 26) கோப்ரா படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.

"இந்த மங்களத் திருநாளில் கோப்ரா படத்தின் டப்பிங் பணிகளைத் துவங்குகிறோம்” என்று தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Tags : Cinema

Latest News