இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கும் வடசென்னை ! நன்றி கூறிய தனுஷ் !

V4U MEDIA [ Sat, Oct 17, 2020 ]

156

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் என்றே சொல்லலாம். இவரது இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என அனைத்துமே வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்றிய நான்கு படங்களுமே மெகா ஹிட்.

 அழுத்தமான கதை மற்றும் கதாபாத்திரம், இந்த இரண்டிற்காகவுமே அனைவராலும் பாராட்டப்படகூடிய இயக்குனராக வலம் வருகிறார்.

நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் நான்கு. கடைசியாக வெளியான அசுரன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு பட்டி தொட்டி என மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது.

2 years of Vada Chennai – STR in lead, Dhanush in cameo - Vada Chennai-  Dhanush- Aishwarya Rajesh- Vetrimaaran- Andrea | Thandoratimes.com |

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் "வட சென்னை". அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த தனுஷ் ரசிகர்களால் கொண்டாடபட்டார். சிறிது நேரமே வந்தாலும் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் அமீர் பலரது பாராட்டையும் பெற்றார். வட சென்னையின் இயல்பு வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இந்தப்படம் அமைந்திருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பவன், டேனியல் பாலாஜி, தீனா, சாய், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி என அனைவருமே நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில், லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் தனுஷின் வண்டர்பார் பிலிம்ஸ், வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து இந்தப் படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்திருத்தது.

அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் ஆண்டு நினைவுகளை தற்போது தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhanush

Latest News