மாஃபியா படத்தின் முக்கிய அப்டேட்!!

V4U MEDIA [ Tue, Dec 10, 2019 ]

கார்த்திக் நரேனின் 'மாஃபியா' படத்தின் இரண்டாவது டீஸர் வெளியானது அதில் ஹீரோவாக அருண் விஜய் மற்றும் வில்லனாக பிரசன்னா நடித்துள்ளனர். இப்படத்தில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல் தான் மையக் கதை. படத்தில் போதை மருந்து விற்கும் மாஃபியா தலைவனாக பிரசன்னா வருகிறார், ஒரு ஸ்டைலிஷ் காவல் அதிகாரியான அருண் விஜய், பிரசன்னாவை பிடிக்க முயற்சி செய்கிறார். படத்தில் கதாநாயகி பிரியாணி பவானி சங்கர் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார், இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லராக
உருவாகியுள்ளது.


தனது முதல் படமான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் புகழ் அடைந்த இயக்குனர் கார்த்திக் நரேன், ஸ்டைலான தோற்றமுடைய நடிகர்கள், சக்திவாய்ந்த உரையாடல்கள், அதிரடி காட்சிகள் மற்றும் வலுவான கதையின் வாக்குறுதியுடன் டீஸரை வெளியிட்டுள்ளார். 'மாஃபியா: சாப்டர் 1' என்ற இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர், ஜேக்ஸ் பெஜோயின் இசை, கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீஜித் சாராங்கின் எடிட்டிங் ஆகியவை இப்படத்தில் உள்ளன. இப்படம் 2020 ஆண்டு முற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 





Latest News