பரத்துடன் நடிக்கும் இரு பெரிய பாலிவுட் நடிகர்கள்!!

V4U MEDIA [ Fri, Dec 13, 2019 ]

10

பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் 'ராதே' என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பரத் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

நடன இயக்குனர் பிரபுதேவா - நடிகர் சல்மான் கான் கூட்டணியில் உருவான படம் 'தபாங் 3'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளனர்.

இதனிடையே, மீண்டும் பிரபுதேவா - நடிகர் சல்மான் கான் இணைந்து தங்களின் புதிய படத்தின் படப்பிடிப்பில பணிபுரிந்து வருகின்றனர். 'ராதே' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார், இப்படத்தை நடிகர் சல்மான் கான், சோகைல் கான் மற்றும் அதுல் ஆகியோர் இணைந்து தயாரிகின்றனர்.


இப்படத்தில் ரன்தீப் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் மூலமாக மீண்டும் பாலிவுட்டில் நடிகர் பரத் நடிக்கவுள்ளார். நடிகர் பரத், சல்மான் கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை நடிகர் பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பரத்தின் இந்த அறிவிப்புக்கு அவரின் திரையுலக நண்பர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இப்படம் அடுத்த ஆண்டு ஈத் விடுமுறை நாட்களுக்கு வெளியாகிறது.

இதற்கு முன்னர் நஸ்ருதீன்ஷா, சன்னி லியோன் ஆகியோர் நடிப்பில் 2013-ம் ஆண்டில் வெளிவந்த 'ஜாக்பாட்' எனும் பாலிவுட் படத்தில் நடிகர் பரத் நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இப்படத்தில் பிரபல நடிகரான கோவிந்த் நம்தேவ் ராதே படத்தில் சேர்ந்துள்ளார், மேலும் அவர் காவல்துறையின் டி.ஐ.ஜி-யாக நடிக்கிறார்.