அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படத்தின் அப்டேட்!!

V4U MEDIA [ Sat, Jan 25, 2020 ]

40

நடிகை அனுஷ்கா கடைசியாக ஜி அசோக் இயக்கிய பாகமதி என்ற திரில்லர் படத்தில் நடித்தார், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அனுஷ்கா த்ரில்லர் நிசப்தம் / சைலன்ஸ் படப்பிடிப்பில் இருந்தார், அதில் அவர் காது கேளாத மற்றும் ஊமையாக இருக்கும் பெண்ணாக நடித்துள்ளார் .

ஹேமந்த் மதுகர் இயக்கிய நிஷாப்தம் படத்தில் முன்பு ரெண்டு படத்தில் அனுஷ்காவுடன் ஜோடியாக நடித்த மாதவன், மற்றும் ஷாலினி பாண்டே, அஞ்சலி, சீனிவாஸ் அவசரலா, சுப்பராஜு மற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


ஆரம்பத்தில் நிசப்தம் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நிஷாபதம் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகும் என்று இப்போது தெரிய வந்துள்ளது. பீப்பிள் மீடியா பாக்டரி மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்த படம் பன்மொழி படமாகும், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
Latest News