"அண்ணாத்தே சேதி" விஜய் சேதுபதியின் "துக்ளக் தர்பார்" முதல் பாடல் வெளியீடு !

V4U MEDIA [ Fri, Jul 31, 2020 ]

92

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் "துக்ளக் தர்பார்"

First look of Tughlaq Durbar out- Cinema express

எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. அதிதி ராவ், மஞ்சிமா மோகன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.

இந்த நிலையில் துக்ளக் தர்பார் படக்குழுவினர் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கவுள்ளனர். "அண்ணாத்தே சேதி" என்ற முதல் சிங்கிளை வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர்.

Latest News