அவர்கள் அழைத்தால் படத்தின் கதையே கேட்காமல் நடிப்பேன் - ஆனந்தி

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ள நடிகை ஆனந்தி, அவர்கள் என்னை அழைத்தால் கதையே கேட்காமல் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.​


இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் தான் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் இயக்குனர் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர், பா.ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

நடிகை ஆனந்தி பேசும்போது, ‘ எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நீலம் புரொடக்சன்ஸ் என்னுடைய சொந்த நிறுவனம் மாதிரி. இவர்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு அழைத்தால் நான் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏனென்றால் படத்தின் திரைக்கதை அவ்ளோ பலமானதாக இருக்கும். இயக்குநர் அதியன் மிகுவும் நல்ல இயக்குனர், அதைவிட அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். 


இப்படத்திற்காக பணியாற்றிய அனைவரும் கடின உழைப்பை கொடுத்துள்ளார்கள். நடிகர் தினேஷ் ஒரு சிறந்த நடிகர். டிசம்பர் 6-ஆம் தேதி இந்த படம் வெளியாகப்போகுது. நிச்சயம் இப்படம் பெரிய வெற்றியடையும்" என்று அவர் பேசியுள்ளார்.Latest News