நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு

V4U MEDIA [ Sat, Apr 03, 2021 ]

97

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு: 80% சரக்கு தட்டுப்பாடு தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்பதால் தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த பின்னர் அதன்பிறகு ஒருநாள் இடைவெளிவிட்டு 6ம் தேதி திங்கட்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதைமுன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 6ம் தேதி வரையிலும் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு விடப்படுகிறது.

தேர்தல் காலம் என்பதால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் சரக்கு பற்றாக்குறை நிலவுகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் லீவு என்பதால் குடோன்களில் இருந்து கடைகளூக்கும் சரிவர சரக்கினை அனுப்பவில்லையாம். இதனால் 80 சதவிகித சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக லீவு என்பதால் மொத்தாமக வாங்கி வைத்துக்கொள்ள நினைக்கும் குடிமகன்கள் இன்று டாஸ்மாக் கடைகளில் கூடி நின்று அடித்துக் கொள்ளப்போகிறார்கள் என்கிறது தகவல்.

Tags : Others