மக்களுக்காக அள்ளிக்கொடுத்த அக்ஷய் குமார்!! பாராட்டும் மக்கள்!

V4U MEDIA [ Sun, Mar 29, 2020 ]

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று தாண்டவமாடி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பிரதமர் கடந்த வாரம் மார்ச் 31ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடையை ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். மேலும் இந்த கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராட மக்கள் தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் அந்த அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரத்தில் தனது கணக்கில் இருந்து சுமார் 25 கோடி ரூபாயை பிரதமரின் நிதிக்கு அனுப்பவுள்ளதாக பிரபல நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்தார்.