சைக்கிளில் ரைடு போன அஜித்! வைரலான புகைப்படங்கள்

V4U MEDIA [ Thu, Feb 25, 2021 ]

121

சைக்கிளில் ரைடு போன அஜித்! வைரலான புகைப்படங்கள் !!

நடிகர் அஜித்குமார் சைக்கிளிங் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பு மட்டுமன்றி பைக் ரேஸ், ஏரோ மாடலிங், போட்டோகிராபி, சமையல் உள்ளிட்டவற்றிலும் அடிக்கடி கவனம் செலுத்தி வருபவர். இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கிச் சுடுதலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் கூட துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் அஜித் ஈடுபடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது அஜித் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.Tags : Cinema