கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது பைலட் உள்பட 2 பேர் பலி

V4U MEDIA [ Fri, Aug 07, 2020 ]

157
கோழிக்கோடு

துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின்  ஒரு பகுதியாக இயக்கப்பட்டது. 191 பயணிகளுடன் வந்த விமானம்  கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமானத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்க தொடங்கியது.

விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. இதில் பைலட் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.

Image

விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. விமானத்தில் தீ பிடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் 10 குழந்தைகள் உள்பட 174 பயணிகள்,  விமான பைலட்டுகள் 4விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமான விபத்து குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டில்

கரிபூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் (சி.சி.ஜே) விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.


கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது பைலட் உள்பட 2 பேர் பலி


Tags : Cinema

Latest News