ஆதித்ய வர்மா படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ!

V4U MEDIA [ Sat, Nov 16, 2019 ]

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ஆதித்ய
வர்மா என்கிற திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் கபீர் சிங் என்கிற பெயரில் இப்படம் இந்தியில் ரீமேக்காகி பெரிய ஹிட்டானது. 

தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து என்பவர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 8-ம் தேதியில் இருந்து வரும் நவம்பர் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் இடம் பெரும் ரொமான்டிக் காதல் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.


Latest News