'ஆதித்யா வர்மா'வில் இருந்து வெளியான பர்ஸ்ட் சிங்கிள்!!

V4U MEDIA [ Sat, Aug 17, 2019 ]

 'ஆதித்யா வர்மா'வில் இருந்து வெளியான பர்ஸ்ட் சிங்கிள்!!

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் 'அர்ஜுன் ரெட்டி'. சந்தீப் வாங்க இயக்கிய இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் தமிழ் ரீ மேக்கிற்கு 'ஆதித்யா வர்மா' என்று தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் விக்ரமின் மகன் துருவ விக்ரம் நடித்து வருகிறார். துருவ விக்ரம் அறிமுகமாகும் முதல் படம் இது.இந்த படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார். இந்த படத்தை கிரீசயா இயக்குகிறார்.

E4 Entertainment நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தில் இருந்து 'எதற்கடி வலி தந்தாய்' என்ற லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் வரிகளை விவேக் எழுத, துருவ் விக்ரம் இந்த பாடலை பாடியுள்ளார்.

Latest News