வால்ட் டிஸ்னியின் ஃப்ரோசன் 2 படத்திற்கு குரல் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

ஹாலிவுட்டில் கிறிஸ் பக் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ஃப்ரோசன். அந்த ஆண்டில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை ஃப்ரோசன் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ஃப்ரோசன் 2 உருவாகியுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட டிஸ்னியின் ஃப்ரோசன் 2 படத்தில் வரும் எல்சாவுக்கு தமிழில் ஸ்ருதி ஹாசன் குரல் கொடுக்கிறார். மேலும், தனது குரலில் 3 பாடல்களையும் பாடியுள்ளார். அதில், இன் டு தி அன்னோன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்றது.

இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், நானும், எனது சகோதரி அக்‌ஷரா ஹாசனும் எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறோமோ அதே போன்று தான், எல்சா மற்றும் அன்னா சகோதரிகளுக்கு இடையிலான பாசமும். அதை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்ததற்கு எனது சகோதரி தான் காரணம். படத்திற்கு பாடல்களும் மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழுக்கு ஸ்ருதி என்றால், பாலிவுட்டில் வெளியாகும் ஃப்ரோசன் 2 படத்திற்கு ப்ரியங்கா சோப்ரா, அவரின் தங்கை பரினீத்தி சோப்ரா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். தெலுங்கிற்கு நித்யா மேனன் குரல் கொடுத்துள்ளார். இப்படம் வரும் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஃப்ரோசன் படத்தின் முதல் பாகமும் நவம்பர் 22 ஆம் தேதி தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.Latest News