நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா உறுதி !

V4U MEDIA [ Thu, Aug 13, 2020 ]

114

தென்னிந்தியவின் பிரபல நடிகை நிக்கி கல்ராணி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Nikki Galrani | Nikki Galrani Photo #573
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியது. கொரோனா குறித்த நிறைய குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை இருப்பதால் எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனக்கு தொண்டை வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை உணர முடியாதது போன்ற மிக லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தமையால் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எப்படி இருந்தாலும், நான் முறையான மருந்துகள் எடுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறேன்.

எனது வீட்டிலேயே நான் தனிமையில் இருப்பதினால் மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என தான் கூற வேண்டும்.

அனைவருக்கும் இது மிகவும் இக்கட்டான சூழல் என்பது தெரியும். இப்போது நமது பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. எனது வயதை பொறுத்து முறையான மருந்துகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர்கள், என்னை விட வயதில் மூத்தவர்கள், என் நண்பர்கள் மற்றும் மற்றவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது. எனவே அனைவரும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். முக்கியமான வேலைகள் தவிர்த்து மற்றபடி வெளியே செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

பல மாதங்களுக்கு மேலாக வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருப்பது விரக்தியை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் அனைவரும் ஒரு பேரழிவு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம். உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழியுங்கள். நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள், மனம் விட்டு பேசுங்கள். உங்கள் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக பாத்து கொள்ளுங்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக தோன்றினால் உதவிக்கு யாரையாவது அழையுங்கள். வீட்டில் பத்திரமாக பாதுகாப்பாக இருங்கள்" என தெரிவித்துள்ளார்


Tags : Cinema

Latest News