தளபதி விஜய் மற்றும் பிகில் படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்துஜா!!

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவர் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25 அன்று வெளியான பிகில் படத்தில் ஒரு கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் நடிகை இந்துஜா. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் அட்லீ மற்றும் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாட்டில் நடித்த கால்பந்து வீராங்கனைகள் என்று பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிறந்தநாள் கேக் வெட்டி அதை முதலில் தளபதி விஜய் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு தன் கையால் இந்துஜா ஊட்டிவிட்டு மகிழ்ந்துள்ளார். அப்போது அவர்களுடன் இந்துஜா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து இந்துஜா கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு என் பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது. இந்த தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்த தளபதி விஜய் மிகவும் இனிமையான மனிதர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தளபதியின் பிகில் படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் இந்துஜா நடித்துள்ளார்.

பிகில் படத்தைத் தொடர்ந்து இந்துஜா தற்போது விஜய் ஆண்டனி, நடிகர் ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் காக்கி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.


Latest News