பகல் கொள்ளையடிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் ! நடிகர் பிரசன்னா குற்றச்சாட்டு

V4U MEDIA [ Wed, Jun 03, 2020 ]

6

கொரோனா ஊரடங்கு நேரத்தில் இரண்டு மாதங்களாக மின்வாரியம் கணக்கு வீட்டிற்கு வந்து எடுக்காமல் தற்போது மொத்தமாக கணக்கெடுப்பு எடுத்து மக்களிடமிருந்து மிகப்பெரிய தொகையை மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மின்சார கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Surprised by your electricity bill this month? Here's what TNEB ...


இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வாரிய கணக்கெடுப்பு வீடு வீடாக எடுக்கப்பட்டு வருகிறது. தனது வீட்டிற்கு மின் கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளதாகவும் இது பகல் கொள்ளையாக இருப்பதாகவும் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது வீடு, தனது தந்தை வீடு மற்றும் மாமனார் வீடு ஆகியோருக்கு சேர்த்து இந்த கட்டணம் வந்திருப்பதாகவும் இது ஜனவரி மாதத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொகையை என்னால் கட்ட முடியும், ஆனால் இதே நிலைமை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு வந்தால் அவர்கள் எப்படி இந்த கட்டணத்தை காட்டுவார்கள் என சரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

img.dtnext.in/Articles/2020/Jan/202001230515416...


நடிகர் பிரசன்னாவின் இந்த கருத்துக்கு மின்வாரியம் உடனடியாக பதில் கூறியுள்ளது. 'பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு எடுத்து தவறு இருந்தால் சரி செய்யப்படும்' என கூறியுள்ளனர்.

Latest News