சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த பிரகாஷ் ராஜ்!

V4U MEDIA [ Tue, Dec 10, 2019 ]


இயக்குனர் சிவாவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் நடிகர் சூரி, இப்படம் தற்காலிகமாக தலைவர் 168 என்று பெயரிடப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது இதுவே முதல் முறை. சூரி இதற்கு முன்பு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் நடித்துள்ளார். இப்போது அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த அணியில் இணைந்துள்ளார். இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் கடைசியாக தமிழில் அசுரன் படத்தில் காணப்பட்டார். மேலும் அக்னி சிறகுகள் படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.


விஸ்வாசம் படத்திற்காக சிவாவுடன் பணிபுரிந்த டி இம்மான், இப்படத்துக்கு இசையமைப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தலைவர் 168 படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூன்றாவது படமாக எந்திரன் மற்றும் பேட்ட படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.
Latest News