துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரம் சிக்கி தவித்த நடிகர் அதர்வா!!

V4U MEDIA [ Tue, Jan 14, 2020 ]

2

துபாயில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நடிகர் அதர்வா விமான நிலையத்தில் சிக்கி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.​


நடிகர் அதர்வா, கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக அசர்பைஜான் செல்ல இருந்தார். ஆனால் மழையினால் விமானங்கள் தடைபட்டன. ஆகவே அவர் அசர்பைஜானுக்கு செல்லும் பயணத்தின் இடையே துபாயில் சிக்கினார். எங்கும் நகர முடியாததால் அவர் துபாய் விமானநிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்கி இருப்பதாக தெரிகிறது.


இது குறித்து அவரது நெருங்கிய வட்டத்தினர் கூறும்போது, அதர்வா சனிக்கிழமையன்று சென்னையிலிருந்து புறப்பட்டார். துபாய் சென்று அங்கிருந்து அசர்பைஜான் செல்லும் விமானத்தில் பயணச் சீட்டு போடப்பட்டது. இதனிடையே கடுமையான மழையால் துபாய் விமான நிலையத்தின் ஓடுபாதை நீரில் மூழ்விட்டது. ஆகவே அவர் அடுத்த விமானத்தை பிடிப்பதற்காக துபாய் விமானநிலையத்திலேயே 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறார். அதைவிட்டால் வேறு வழியில்லை என்றனர்.