3 முட்டையின் விலை ரூ. 1600 : 5 நட்சத்திர உணவக பில்லினால் நொந்து போன இசையமைப்பாளர்

V4U MEDIA [ Sat, Nov 16, 2019 ]

11

பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ் தன்னுடைய எதிர்பாராத அதிர்ச்சி அனுபவத்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரண்டு வாழைப் பழங்களுக்கு ரூபாய். 442 பில் வழங்கப்பட்ட சம்பவம் இணையத்தளத்தில் வெகுவாக வைரலானது. 

தற்போது பிரபல இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி இதே போன்று, தான் சந்தித்துள்ள ஒரு அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெறும் 3 முட்டைகளுக்கு அந்த ஹோட்டல் அவரிடம் ரூ. 1672 கட்டணமாக வசூலிதுள்ளனர் என்று சேகர் ரவ்ஜியானி ஒரு பதிவிட்டுள்ளார். 

இதுபோல் இதற்கு முன்னர் நடிகர் ராகுல் போஸ் பதிவிட்ட ட்விட்டர் பதிவினால், அந்த ஹோட்டல் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அரசாங்கம் அந்த ஹோட்டலுக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தது.