பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ”

V4U MEDIA [ Mon, Jul 15, 2019 ]

90

சர்வதேச அளவில் கவனம் பெற்ற ராஷ்ட்ரபுத்ரா போன்ற படங்களை இயக்கிய ஆஸாத், முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ” பாம்பே டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

 

பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தியாவின் முதல் சமஸ்கிரித படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவரும் ஆஸாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாசிக்கில் உள்ள ராணுவ பள்ளியில் பயின்றவர் இயக்குனர் ஆஸாத். 

 

ஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம். சமீபத்தில் 72வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்ட்ரபுத்ரா திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் இயக்குனரையும், நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள். உலக அளவில் ரசிகர்களை பெற்ற படம் ராஷ்ட்ரபுத்ரா.